Monday, December 30, 2013

பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம்

Part 1




Part 2



பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் - ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒரு விழியப்பதிவே இன்றைய சிறப்பு பதிவாக வெளியிடப்படுகின்றது.

இந்த விழியம் 2 பகுதிகளாக உள்ளது. இன்று 25 நிமிடங்கள் கொண்ட முதல் பதிவு வெளியிடப்படுகின்றது. இப்பதிவில் நான் வழங்கும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு வரலாறு, ஆலயங்கள் பற்றிய விளக்கங்கள், சோழர்களின் ஆட்சி, பௌத்த ஹிந்து மத ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.

விழியப் பதிவு: டாக்டர். நா.கண்ணன், முனைவர்.சுபாஷிணி
விழியத் தயாரிப்பு: முனைவர்.சுபாஷிணி


யூடியூபில் இங்கே காணலாம்.
பகுதி 1:  http://www.youtube.com/watch?v=G496Az-sgFg
பகுதி 2:  http://www.youtube.com/watch?v=ZSDYvzy1klc

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...

ஆங்கிலக் கலப்பு இல்லாத அருமையான வர்ணனை. மலேசியாவில் இப்படியொரு கோயில் இருந்துள்ளது என்பதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன். சோழர்கள் கடராம் வென்றதற்குச் சாட்சியாக விளங்குகின்றது இக்கோயில்.
படம் பிடித்த ஐயா கண்ணன் அவர்களுக்கும், விளக்கம் அளித்த திருமதி.சுபாஷினி டெர்மல் அவர்களுக்கும் எனது நன்றி.

அன்பன்
கி.காளைராசன்